Trending News

மும்பையை கலக்கிய ஹாஜி மஸ்தானாக ரஜினி!

(UDHAYAM, BOLLYWOOD) – ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள்.

இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார்.

கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான்.

இவர் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு நிதி வழங்குனராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர் எப்போதும் வெள்ளை நிறத்தாலான உடைகள், காலணிகள்தான் அணிவாராம். அதேபோல், விலையுயர்ந்த சிகரெட்டுகள்தான் புகைப்பாராம். வெள்ளைக்கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம். இதுவே இவரை ஏழைகளின் மத்தியில் அவரை ஸ்டைல் மன்னாக எடுத்துக்காட்டியது.

அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கப்போவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால், ரஞ்சித் தரப்பிலோ ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Stormy Daniels case: Trump repaid lawyer $130,000 ‘hush money’, says Giuliani

Mohamed Dilsad

No political interference when appointing Principals – Premier

Mohamed Dilsad

Swiss Embassy employee arrived at CID taken to Mental Health Institute

Mohamed Dilsad

Leave a Comment