Trending News

கட்டுநாயக்க பகுதியில் புதிய போக்குவரத்து திட்டம்

(UTV|COLOMBO ) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து விமான நிலையத்தை நோக்கி வருகைத்தரும் வாகனங்கள் எதிக்கொள்ளும் முதலாவது நுழைவாயிலை பயன்படுத்த முடியும்.

அதேபோல் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முடியும். அவ்வாறு வருகை தரும் வாகனங்கள் வெளிச்செல்வதற்கான அறிவுறுத்தல்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை வழிக்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட திசையில் இருந்து வருகை தரும் வாகனங்கள் மற்றும் மினுவாங்கொடை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் முன்பு குறிப்பிட்டது போல் விமான நிலையத்தின் முன்னாள் உள்ள கட்டுநாயக்க மினுவாங்கொட பிரதான வீதியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

Mohamed Dilsad

Lane laws nets over 1,000 motorists

Mohamed Dilsad

සුනාමියෙන් ජීවිත අහිමිවූවන් සිහිකර විනාඩි 02ක් රටම නිහඬවෙයි.

Editor O

Leave a Comment