Trending News

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு-20 தொடர்! இந்திய அணி அறிவிப்பு!

(UTVNEWS | COLOMBO) –இலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பும்ரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 2020இல் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் இருபதுக்கு-20 போட்டி வரும் ஜனவரி 5ஆம் திகதி கவுஹாத்தியில் ஆரம்பமாகிறது.

பின்னர் ஜனவரி 7ஆம் திகதி ராஜ்கோட்டில் இரண்டாவது போட்டியும், 10ஆம் திகதி புனேவில் மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

இதில் இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா ஓய்வு தேவை என கேட்டுக்கொண்டதால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷிகர் தவன், பும்ரா ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினர்.

BCCI

@BCCI

India’s T20 squad against Sri Lanka: Virat Kohli (Capt), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer,Manish Pandey, Sanju Samson, Rishabh Pant (wk), Shivam Dube, Yuzvendra Chahal, Kuldeep Yadav,Ravindra Jadeja, Shardul Thakur, Navdeep Saini, Jasprit Bumrah, Washington Sundar

4,583 people are talking about this

இந்திய அணி விபரம், “விராட் கோஹ்லி (அணித்தலைவர்), ஷிகர் தவன், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சாய்னி, சார்துல் தாகூர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.”

Related posts

Ten students arrested in Ananda/Nalanda given bail

Mohamed Dilsad

Mel Gibson to helm “Wild Bunch” remake

Mohamed Dilsad

இலங்கைக்கு சார்க் வலய செயலாளர் நாயகம் பாராட்டு

Mohamed Dilsad

Leave a Comment