(UTVNEWS | COLOMBO) –கிறிஸ்தவர்கள் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை வறியவர்களுடன் குறிப்பாக ஈஸ்டர் தின துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரினதும் ஆன்மீக ஒற்றுமைத் தன்மையுடன் கொண்டாடும் அதேநேரம் உண்மையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் முன்னேற்றம் ஆகியவை பற்றிய விசேட பிரார்த்தனையை மேற்கொள்ளுமாறும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவரது கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் மீண்டும் வந்துவிட்டது. மனித குலத்தின் மீது கடவுளுக்கு உள்ள அன்பின் செய்தியைப் பற்றிய நம்பிக்கையையே கிறிஸ்மஸ் சொல்கிறது. எம்மைப் பாதுகாப்பதற்காக எமக்கிடையே ஒரு மனிதனாக பிறந்த அவரது தனித்துவ செயற்பாடு சரித்திரத்தில் எப்போதுமே தாண்டமுடியாத ஒரு செயற்பாடாகும்.
மனித சுபாவமானது பலமற்றதும் மெல்லிய தன்மையுடையதுமாகும். இந்நிலையில் எம்மை பாதுகாக்க தேவன் நேரடியாக இடையூரு செய்ததன் மூலம் அவர் எங்களில் ஒருவராக மாறினார்.