(UTV|COLOMBO) – கடந்த ஓகஸ்ட் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் தரப்பட்டியல் இம்முறை வெளியிடப்படாது என கல்வி அமைச்சுத் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இடையே தேவையற்ற போட்டியை தோற்றுவிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பல்கலைக்கழக அனுமதிக்கான தேவை கருதி தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்திலான மாணவர்களின் தரவரிசை நேரடியாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.