(UTV|COLOMBO) – கடந்த ஒருவார காலமாக தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறுதியாக , பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் குறித்த கடல் சிங்கம் அவதானிக்கப்பட்டதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்காவுக்கு கீழ் திசையில் உள்ள மெரியட் தீவிலிருந்து கடல் நீரோட்டம் மூலமாகவோ அல்லது சமுத்திரத்தில் ஏற்பட்ட ஏதாவது ஒரு மாற்றம் காரணமாக குறித்த கடல் சிங்கம் இந்து சமுத்திரத்திற்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.