Trending News

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது.

அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Mohamed Dilsad

தொடர்ந்து அச்சுறுத்தும் காலநிலை!

Mohamed Dilsad

BREAKING – GOTA’s dual citizenship verdict out at 6 PM

Mohamed Dilsad

Leave a Comment