(UTV|COLOMBO) – 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிந்தது.
உலகையே உலுக்கிய ஆழிப்பேரையில் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் கடந்துவிட்டன.
இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை அழிவை ஏற்படுத்தியது.
இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்து 196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொல்லப்பட்டன.
சுனாமி அனர்த்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.