(UDHAYAM, COLOMBO) – ஐ.பி.எல். 10 ஆவது தொடரின் 22 ஆவது போட்டி இந்தூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மெக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியும் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.
[accordion][acc title=”இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, பஞ்சாபை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.”][/acc][/accordion]
[ot-caption title=” இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இந்த ஐ.பி.எல். தொடரில் இதுவரை சோபிக்காத தென்னாபிரிக்காவின் அம்லா, 60 பந்துகளில் 104 ஓட்டங்களைக் குவிக்க பஞ்சாப் அணி, முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்ட எண்ணிக்கையைப் பெற வித்திட்டார்.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9078.jpg”]
[ot-caption title=”பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வெல், 18 பந்துகளில் 40 ஓட்டங்களைக் குவித்தார். இதனால் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9068.jpg”]
[ot-caption title=” 199 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்தது மும்பை.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9068-1.jpg”]
[ot-caption title=”அந்த அணியின் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களான பார்த்திவ் படேல், ஜோஸ் பட்லர் மற்றும் நிதிஷ் ராணா முறையே 37, 77, 62 ஓட்டங்களைக் குவித்தனர்.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9044.jpg”]
[ot-caption title=”இதனால், 199 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 16ஆவது ஓவரிலேயே எட்டிப் பிடித்தது மும்பை அணி.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS8626.jpg”]
[ot-caption title=”இந்தப் போட்டியில் வெற்றியடைந்ததன் மூலம், புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது மும்பை.” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/04/ARS9021.jpg”]
[ot-video][/ot-video]]