(UTV|COLOMBO) -தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையாகியிருந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக இதனை தெரிவித்தார்.