(UTV|COLOMBO) – இந்த வருடத்தில் ஜனவரி தொடக்கம் இதுவரையான காலத்தில் வரையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,178 ஆக பதிவாகியுள்ளதாகவும் 102 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் கடந்த 24 நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,025 ஆக பதிவாகியிருப்பதாக
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்வர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 19,166 ஆகும்.
இதேவேளை, இந்த வருடத்தில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் எலிக்காய்ச்சலினால் 5,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.