Trending News

பல மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

(UTV|COLOMBO) – குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் நேற்று நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடிக்கும் என்று அம்மாநில காவற்துறை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எனினும், உத்தர பிரதேசத்தில்தான் அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்துள்ள போராட்டங்களின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சுமார் 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

Mohamed Dilsad

SLAF Conducts First Ever Aerial Seed Bombing Operation

Mohamed Dilsad

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

Mohamed Dilsad

Leave a Comment