Trending News

இரு ரயில்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

(UTV|COLOMBO) – பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாக கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.

அதன்படி, 87 மற்றும் 88 ரயில்கள் இயக்கப்படாது எனவும் அதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கும் இந்த இரண்டு ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரை சென்றடையும்.

குறித்த ரயில் மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

බත්තරමුල්ලේ සීලරතන හිමියන්ට ජනාධිපතිවරණයට ඉදිරිපත්වීමට මුදල් ලැබෙන විදිය.

Editor O

தேசிய அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று நிர்ணயம்

Mohamed Dilsad

சீரற்ற வானிலை 4 பேர் உயிரிழப்பு 23 பேரை காணவில்லை

Mohamed Dilsad

Leave a Comment