(UTV|COLOMBO) – அரசாங்கத்தின் அனைத்து நிறுவனங்களின் செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியல் அமைப்பு சபை உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் இந்த சுற்றுநிரூபம் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் நீர், மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளையும், அரசாங்க பணியாளர்களின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களையும் கட்டுப்படுத்துமாறும் இந்த சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் திறைசேரியால் குறித்த சுற்றுநிருபம் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.