(UTV|COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ‘ஒன்லைன்’ மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
ஜனவரி முதல் அரசாங்கத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார் மற்றும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான இந்நிதி இம்முறையின் கீழ் வழங்கப்படவுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நிதியைச் செலுத்துவதை, செயற்றிறன்மிக்கதாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள தகுதியான மாணவர்களின் தகவல்கள் அடங்கிய கட்டமைப்பொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கமைவாக, ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி இம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் புதிய முறை மூலம் வைப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.