(UTV|COLOMBO) – சேவை நிமித்தம் உயர் பொலிஸ் அதிகாரிகள் 51 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் வரையில் இவ்வாறு சேவை நிமித்தம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக கே.என்.ஜே வேதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.