Trending News

மாணவர்களை ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க திட்டம்

(UTVNEWS | COLOMBO) -உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

பெறுபேறுகள் வெளியாகி, ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார்.

அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தார்.

உயர்தரப் பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிடுவதற்கும் திட்டம் வகுக்கப்படுவதாகவும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)  

Related posts

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

Mohamed Dilsad

ஷாபி நிரபராதி என நீதிமன்றம் கூறினாலும், தேரர் அவரை குற்றவாளியாக்குவதையே குறியாகக் கொண்டுள்ளார் – முன்னாள் அமைச்சர் ரிஷாத்

Mohamed Dilsad

Railway employees to commence work-to-rule action tonight

Mohamed Dilsad

Leave a Comment