Trending News

ஐ.தே. முன்னணி பாராளுமன்ற குழுக் கூட்டம் திகதி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்றின் புதிய அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி கூடவிருக்கும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக்குழு ஜனவரி 2ஆம் திகதி கூடவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் மாதத்தில் கலைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுவதால் ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவிருப்பதாக தெரிவித்தார்.

விடுமுறைக்காக இந்தியா சென்றிருக்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதன் பின்னரே புதிய செயற்குழுக் கூட்டம் தொடர்பில் திகதி அறிவிக்கப்படலாமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Sri Lanka, West Indies fined for slow over rate

Mohamed Dilsad

Private bus owners unions strike at midnight today

Mohamed Dilsad

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின

Mohamed Dilsad

Leave a Comment