(UTVNEWS | COLOMBO) -அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யா மேல் முறையீடு செய்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஒலிம்பிக், 2022 பீஃபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைகளை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.
அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் சார்பில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.