(UTV|COLOMBO) -ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம்(30) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணிக்கு கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டிய முறைமை என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.