Trending News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

(UTV|COLOMBO) – குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதேவேளை, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை விளக்கியும் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒன்றுகூடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றதுடன், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

Related posts

VIjayakala grilled over LTTE remarks

Mohamed Dilsad

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு

Mohamed Dilsad

President Calls For Global Ban On Firearms

Mohamed Dilsad

Leave a Comment