Trending News

மே தின கூட்டத்தில் சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது கட்டாயம்

(UDHAYAM, COLOMBO) – கண்டி கெடம்பே மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் கட்சியின் அனைத்து நாடாளுமன்றம், மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சியின் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் தொடர்பில் மே தின கூட்டத்தின் பின்னர் இடம்பெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்பதற்கும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தினம் தொடர்பிலேயே இந்த கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

Related posts

டொரிங்டன் பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல்

Mohamed Dilsad

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும்(15) விசேட போக்குவரத்து

Mohamed Dilsad

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment