Trending News

சுதந்திர ஆணைக்குழுவின் மூலம் உயர்தரத்திலான ஊடகசெயற்பாடு – பிரதி அமைச்சர் பரணவிதான

(UDHAYAM, COLOMBO) – சுதந்திர ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கையில் உயர்தரமான ஊடக செயற்பாடுகள் இடம்பெறும் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

ஜகத்தாவில் இன்று நடைபெற்ற ஊடக சுதந்திரம் தொடர்பான மாநாட்டில் பிரதியமைச்சர் உரையாற்றினார்.

அரசாங்கம் ஊடகவியலாளர் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அத்தோடு ஊடகவியலாளர்களுக்கெதிரான பாதகமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மை தொடர்பான குழுநிலை கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார் .

நாம் மெதுவாக படிப்படியாக ஊடக சுதந்திரத்தை இலங்கையில் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோன்று ஊடகப் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு தற்போதைய தேவை ஜனநாய கொள்கைகளுக்கு மதிப்பளித்தலே ஆகும். இதுதொடர்பில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த விடயத்தில் நாம் திட்டமிட்ட இலக்கை அடைந்துள்ளோம்.

ஊடகவியலாளர்களுக்கெதிரான சக்திகளிலிருந்து ஊடகவியலாளர்களை பாதுகாத்து ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

உயிரிழந்த ஆசிரியர் லசந்த விக்கிரதுங்கவின் மரணம் தொடர்பாக பிரதியமைச்சர் குறிப்பிடுகையில் விசாரணைகள் தெடர்பில் சட்டரீதியான தாமதங்கள் உண்டு இருப்பினும் சட்டத்திற்கு முன் குற்றவாளிகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பலகோணங்களில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல சந்தேச நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை பத்திரிகைகளின் தரம் அனைத்து தரப்பினரினாலும் முறையாக முன்னெடுக்கப்படவேண்டும். அரசாங்கம் தற்பொழுது சுதந்திர ஊடக ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் ஊடகதரத்தை மேம்படுத்துவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தகவலறியும் சட்டத்தை (RTI )வெற்றிகரமாக இலங்கையில் முன்னெடுத்துள்ளது. இதேபோன்று ஊடக ஒழுக்கவிதிகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

Related posts

Japan’s former Premier to hold talks with President, Prime Minister

Mohamed Dilsad

நுகர்வோர் சட்டங்களை மீறிய 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Mohamed Dilsad

AG urges Court of Appeal to dismiss Local Government Elections petition

Mohamed Dilsad

Leave a Comment