(UDHAYAM, COLOMBO) – நல்லெண்ணத்துடன் உலகைக் காணும் கருணையுடன் கூடிய ஒற்றுமையான சமூகத்தை; கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புனித விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தொவித்துள்ளர்.
வாழ்த்துச் செய்தியில் மேலும் தொவித்துள்ளதாவது:
உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம் மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்பு மிக்க சமய நிகழ்வாகும். இம்முறை வெசாக் தினம் இலங்கையரான எமக்கு இன்னுமோர் வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
பல நூற்றாண்டுகளாக தூய தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாத்து, உலகின் ஏனைய மக்களுக்கும் அதனைப் பிரச்சாரம் செய்வதில் முன்னின்று செயற்பட்ட எமது நாட்டில் இம்முறை ஐக்கிய நாடுகளின் 14 ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வு மற்றும் உலக பௌத்த மாநாடு என்பவற்றை நடாத்த முடிவது மிகவும் பெறுமதியானதோர் சந்தர்ப்பமாகும்.
அன்பினை அடிப்படையாகக் கொண்ட புத்த தர்மத்தைப் புத்தியுடன் அறிந்து, ஞானத்துடனும், நடைமுறை ரீதியாகவும் வாழ்வுடன் இணைத்துக் கொண்டு, அதன் தத்துவ உள்ளடக்கம், உலகளாவிய முக்கியத்துவத்தை மென்மேலும் உலகிற்கு கொண்டு செல்ல நாம் முறையாக அணிதிரள வேண்டியுள்ளோம். இம்முறை சர்வதேச வெசாக் தின நிகழ்வு எமக்கு முன்வைக்கும் முக்கிய சவால் அதுவே.
நல்லுள்ளத்துடன் உலகைக் காணும், கருணையுள்ளத்துடன் வாழ்வினைக் கழிக்கும் ஒற்றுமையான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய வெசாக் திருவிழாவாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் என்று பிரதமர் அந்த வாழ்த்துச்செய்தியல் மேலும் தெரிவித்துள்ளார்.