Trending News

தலசீமியாவினால் 360 மில்லியன் மக்கள் பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – தலசீமியா நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியே அந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்று வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் பேராசிரியர் அனுஜ் பேமவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட வைத்தியர் பேராசிரியர் அனுஜ் பேமவர்தன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சிறப்பான பணியை ஊடகங்கள் மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பரம்பரை நோய்களில் தலசீமியா நோய் முன்னிலையில் காணப்படுகிறது. உலக சனத்தொகையில் 360 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாரிய தலசீமியா மற்றும் சிறிய தலசீமியா என்ற நோய் ரீதியில் இவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்தார். பாரிய தலசீமியா நோய் குழந்தை பருவத்தில் இருந்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சிறிய தலசீமியா நோய் உடலில் மறைந்து காணப்படும். இதன் அறிகுறிகள் தென்படுவதில்லை. சிறிய தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர் திருமணம் முடிக்கும்போது பிறக்கும் குழந்தைகள் இந்தநோயினால் தாக்கத்திற்கு

உள்ளாகியிருக்கக்கூடுமென்று விசேட வைத்தியர் அனுஜ் பேமவர்த்தன சுட்டிக்காட்டினார்.

சமூக மட்டத்திலும் அரச மட்டத்திலும் இவர்கள் குறித்து தெளிவபடுத்தும் தேவையை அவர் தெளிவுபடுத்தினார். இவ்வாறான விடயங்களில் சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தலசீமியா நோயாளர்களின் சிகிச்சைக்காக அரசாங்கம் பாரிய தொகை செலவிடுகிறது. இந்த நோய் தொடர்பாக கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட நூல் அடுத்த வருடத்தில் இருந்து தரம் 7 முதல் தரம் 10 வரை கணனிமயப்படுத்துவதற்காக நூல் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

 

Related posts

Postal trade unions initiate indefinite fast

Mohamed Dilsad

அமைச்சின் செயலாளர்களுக்கான அறிவிப்பு…

Mohamed Dilsad

Special traffic plan in Colombo on May 11, 12

Mohamed Dilsad

Leave a Comment