Trending News

கிழக்கில் முதல்வரின் முயற்சி வெற்றி-முதற்கட்டமாக ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு பட்டதாரிகளுக்கு கட்டம் கட்டமாக நியமனம் வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக  ஆயிரத்து 700 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கில்  காணப்படும் 4784 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதனை கட்டம் கட்டமாக நிரப்புவதற்கு மாகாண சபை தீர்மானித்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

முதற்கட்ட நியமனத்தின் போது நியாயபூர்வமான காரணங்களுடைய பட்டதாரிகளை போட்டிப் பரீட்சை இன்றியும் சிலரை போட்டிப் பரீட்சை மூலமாகவும் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது, அத்துடன் தற்போது நிரப்பப்படவுள்ள வெற்றிடங்களின் போது பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக நிர்ணயிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கிழக்கு முதலவர் கூறினார்.

அத்துடன் வெட்டபுள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை உள்வாங்கவும் பட்டதாரிகளைஉள்வாங்கியதன் பின்னர் குறித்த பாடங்களுக்கு மேலும் வெற்றிடங்கள் மீதமாயிருந்தால் அவர்களைபரீட்சையின்றி உள்வாங்கவும் நடவடிக்கையெடுக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தீர்மானித்துள்ளார்.

முடிந்தளவு இலகுவாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை முழுமையானநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாாபிஸ் நசீர் அஹமட்சுடடிக்காட்டினார்.

தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியை கையேற்கும் போது மாகாணத்தில் வெற்றிடங்களே இல்லையென்று கூறப்பட்ட போதும் அதன் பின்னர் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்டபட வெற்றிடங்களை கணக்கிட்டு இன்று முதற்கட்டமாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கிழக்கின் கல்வித் துறையிலுள்ள வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்படவுள்ளதாகவும் இதன் பின்னர் ஏனைய திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களுக்கு  ஊழியர்களை நியமிப்பதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும் என நம்புவதாக கிழக்கு முதல்வர் தெரிவித்தார்.

பட்டதாரிகள்  80 நாட்களுக்கும் அதிகமாக வீதிகளில் நின்று வெயிலிலும் மழையிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகையில் அவர்களுடைய தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க தமது முயற்சி வெற்றியளித்தமை தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

62 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த பங்களாதேஷ்

Mohamed Dilsad

මැතිවරණ පැමිණිලි 2227 න් 1521ක් විසඳා අවසන් – මැතිවරණ කොමිෂම

Editor O

US weighs military response over Syria

Mohamed Dilsad

Leave a Comment