Trending News

மீட்பு பணியில் முப்படை, இந்திய அன்புலன்ஸ் வண்டிகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுக்கும் பணியில் முப்படையினர் ஈடுள்ளனர்.

இன்றைய தினம் மாலை பாஹியன்கல, பாலிந்தநுவர, புளத்சிங்கள,கலவான ,வெல்லம்பிடிய, பாதுக்க, நெழுவ, மொரவக, கம்புறுபிடிய, வீரகெடிய,பெலியத்த, தெய்யன்தர, தவலம, முலடியன, வலஸ்முல்ல, இரத்தினபுரி, எல்லாவல, பரகடுவ, பதுவத்த, பிடகந்த, தெஹியோவிற்ற, அரங்கொடகந்த, எஹெலியஹொட பிரதேசத்தில் அனர்த்த உதவி பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளத்தினால் தவிக்கும் பாஹியன்கல, பதுரலிய பிரதேச மக்களை மீட்கும் பணிகளில் இராணுவ கொமாண்டோ படையணி உட்பட 1000 இராணுவ படைவீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற் படையினரது படகு சேவை மற்றும் விமானப் படையினரது ஹெலிகொப்டர் சேவைகளும் இடம்பெற்றுவருகின்றன.

கடற்படையினரினால் வெள்ளத்தில் சி;க்கியிருப்போரை மீட்பதற்காக 28 வள்ளங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1990 என்ற இந்திய அன்புலன்ஸ் சேவையின் 84 அன்புலன்ஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான எஹெலியஹொட அரங்கொட மலைப் பிரதேசத்தில், பதுவத்த, பிடகந்த பிரதேசத்தில் 2000 ற்கு மேலான இராணுவத்தினர் அனர்த்த மத்திய நிலையத்தின் கட்டளைக்கு அமைய மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

7 ஹெலிகெப்டர்கள் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

 

Related posts

Father and three children found dead inside house

Mohamed Dilsad

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு

Mohamed Dilsad

හිමිනමක් ඝාතනය කිරීමේ සිද්ධියකට කාන්තාවක් අත්අඩංගුවට

Editor O

Leave a Comment