(UDHAYAM, COLOMBO) – ஹிஜ்ரி 1438 புனித ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்கும் மாநாடு தற்போது கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கொழும்பு பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிறைக் குழுவின் வழி நடத்தலில் அதன் தலைவர் மௌலவி றியாழ் தலைமையில் இடம் பெறும்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் ஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டிற்கான புனித ரமழான் தலைப் பிறை தென்பட்டதை அடுத்து புனித ரமழான் முதல் நோன்பு நாள் நாளை ஆரம்பமாகிறது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுவின் பிரதித் தலைவர் அப்துல் ஹமீட் பஃஜி, எமது செய்திப்பிரிவிற்கு இதனை தெரிவித்தார்.