Trending News

நடிகர் விஜயின் தங்கை இறந்தது எப்படி?: உருக்குமான பதிவை வெளியிட்ட தந்தை..

(UDHAYAM, COLOMBO) – இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை இதுக்குறித்து உருக்கமாக சில கருத்துக்களை பேசியுள்ளார்.

இதில் இவர் ’விஜய்க்கு தன் தங்கை வித்யா தான் உலகம், எப்போது தன் தங்கையை தலையில் தூக்கி சுற்றி விளையாடுவார்.

வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும். வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் எங்களை விட்டு போனது.

ஒருநாள் விஜய் அருகிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வித்யா மூச்சு திணறியடிபடி இறந்தார், அன்று விஜய் ‘அப்பா..னு’ கதறி அழுததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை’ என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

Related posts

US soldier killed in Somalia firefight

Mohamed Dilsad

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…

Mohamed Dilsad

ரஜமகா விகாரை பொறுப்பாளரிடம் கப்பம் கோரிய மூவருக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment