Trending News

ஐ.சி.சியின் புதிய அதிரடி விதிமுறைகள் விரைவில்

(UDHAYAM, COLOMBO) – ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு சர்வதேச கிரிக்கட் சபை கொண்டுவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய முறையில் துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்ததும், தடிமனான துடுப்பாட்ட மட்டை உபயோகிப்பதால் பந்து சேதமடைகிறது எனவும் வெகு நாட்களாகவே பரவலாக பேசப்பட்டும் முறைப்பாடு செய்யப்பட்டும் வந்தது.

எனவே இது தொடர்பில் பல கோரிக்கைகளும் சர்வதேச கிரிக்கட் சபையிடம் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில அதில் மூன்று முக்கிய கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கட் சபை நிறைவேற்ற உள்ளது.

துடுப்பாட்ட மட்டை அளவில் விதிமுறை

பந்தின் தன்மைக்கு ஏற்ற துடுப்பாட்ட மட்டை உபயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் துடுப்பாட்ட மட்டையின் தடிம அளவு 67 mm இருக்க வேண்டும் எனவும், துடுபாட்ட மட்டையின்; ஓரம் 40 mm வரை இருக்கலாம் எனவும் புதிய வரைவு வகுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு அட்டை முறையில் வீரரை வெளியே அனுப்ப நடுவருக்கு உரிமை

ஒரு தனிப்பட்ட வீரரின் நடவடிக்கையை கண்காணித்து அது விதிமுறைகளுக்கு மீறி இருந்தாலோ அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட காற்பாந்தாட்ட போட்டியில் இருக்கும் சிவப்பு அட்டை விதிமுறை போன்றதாகும்.

ரன் அவுட் விதிகளில் புதிய மாற்றம்

ரன் எடுக்க முயலும்போது க்ரீஸை தொட்டுவிட பல முறை வீரர்கள் தாவி விழுவதை பார்த்திருப்போம். அவ்வாறு தாவும்போது பேட் தரையில் பட்டு பவுன்ஸ் (Bounce) ஆக நேரும். பேட் க்ரீஸ் கோட்டுக்கு உள்ளே வந்த நிலையிலும் தரையில் படாமல் இருந்தால் அவர் அவுட் என்றே கருதப்படுவர்.

இந்த விதிமுறை பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தோல்வியையே தீர்மானிக்கும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் ஷர்மா அவரது விக்கெட்டை இவ்வாறே பறிகொடுத்தார்.

இந்த விதிமுறையை பல வருட ஆலோசனைக்கு பிறகு இப்போது மாற்றியுள்ளது சர்வதேச கிரிக்கட் சபை.

துடுப்பாட்ட வீரர் கீர்ஸுக்குள் தனது பேட்டை கொண்டு வந்தாலே அது ரன் கணக்கில் சேரும் என்று புதிய மாற்றத்தை கொண்டுவந்தது.

இது துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.

இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

Showery condition expected to continue

Mohamed Dilsad

Grand welcome for President at Dhaka International Airport

Mohamed Dilsad

எதிர்வரும் 24 மணி நேரத்தில் பலத்த காற்று! – அவதான எச்சரிக்கை!

Mohamed Dilsad

Leave a Comment