Trending News

நுவரெலியா தபால் அலுவலக கட்டிடத்தை விற்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! – [photos]

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்து கட்டிட நிபுணர்களினனால் ”’குட்டி இங்கிலாந்து” என வர்ணிக்கப்படும் நுவரெலியாவிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அழகிய கட்டிடமே நுவரெலியாவின் பிரதான தபால் நிலையமாகும். இந்த தபால் நிலையம் 1894ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் நிறைவுற்று மக்களின் தேவைகளுக்காக கையளிக்கப்பட்டாதாக குறிப்புகள் சில உள்ளன.

இங்கிலாந்தின் SAINSBURY WACTHAMSTO நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுமார் 40 அடி உயரம் கொண்ட அழகிய கடிகாரம், பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக் கொண்டே இவ்வழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலும் தேக்கு மரங்களே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்திய நாட்டின் பெங்களுரு நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட கூரை ஓடுகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவல் அவ்வோடுகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

தபால் சேவைக்கு 175 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு 1990ஆம் ஆண்டு இலங்கை முத்திரை சபையினால் இவ்வழகிய தபால் நிலையத்தைக்கொண்ட ரூ.10 பெறுமதியான முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் அனைவரும் இவ்வழகிய தபால் நிலையத்தை பார்வையிடுவதும் அதன்முன் புகைப்படங்கள் எடுப்பதும் அவர்களை வெகுவாக கவரும் இடம் என்பதற்கு சான்று பகர்கின்றது. அத்தோடு நுவரெலியா நகரிற்கு பிரதானமான கட்டிடமாக இத்தபால் நிலையம் அமைந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிரதேச சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷெல்டன் ஹெட்டிஆரச்சி அவர்கள் 2014ம் ஆண்டு நுவரெலியா சலகுன என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பாரம்பரிய மிக்க அடையாளச் சின்னமாக விளங்கும் இந்தக் கட்டிடத்தை தற்போது விற்பனை செய்ய முயற்சிகள் எடுக்கப்பபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரீவித்து  இன்று 09.06.2017ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் அரச ஊழியர்கள் மற்றும் பிரதேச வாசிகள் பலர் கலந்து இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ‘தோசைக் கடைக்கு விற்கவேண்டாம்” என குரல் எழுப்பியும் பதாதைகள் ஏந்தியவாறு சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், முன்னாள் நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே மற்றும் அரச ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/p-2.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/pp-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/ppp-1.jpg”]

Related posts

US closes anti-dumping inquiry on Sri Lanka rubber bands

Mohamed Dilsad

எக்னெலிகொட வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

Mohamed Dilsad

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

Mohamed Dilsad

Leave a Comment