Trending News

மட்டக்களப்பில் லங்கா சதொச

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சதொச கிளை திறக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த லங்கா சத்தொச கிளை இலங்கையில் 378வது கிளையாகும்.

இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன், எஸ்.கலீல், எஸ்.கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி.எஸ்.மீனா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Related posts

India bus plunge leaves 21 pilgrims dead

Mohamed Dilsad

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பல தலைவர்கள் வாழ்த்து [VIDEO]

Mohamed Dilsad

வரவு செலவு திட்டத்தின்இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment