(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களை இந்த ஆண்டுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான கலந்துரையாடலில், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டரை நாட்களாக மேற்கொண்ட நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் அவர் இதன்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இலங்கை பொதுமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் குறிப்பிட்டுள்ளார்.