Trending News

பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயனமோ இல்லை

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டுக்காக தரம் 7ற்கு வழங்கப்பட்டுள்ள பூகோள விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் பாரிய உலோக வகைகளோ விஷ இரசாயன பொருட்களோ அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வித்திணைக்கள வெளியீட்டு பிரிவு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.திலங்கசிங்ஹ தெரிவிக்கையில்  இந்தப் புத்தகங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்திற்கு அமைய, அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

ஜனவரி மாதத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இதுவரையில் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் இது தொடர்பில் எந்தவொரு முறைப்பாட்டையும் முன்வைக்கவில்லை என்று கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்தப் புத்தகங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொலிப்ரோலின் கடதாசியை இறக்குமதி செய்த சந்தர்ப்பத்தில் பெறப்பட்ட எஸ்.ஜி.எஸ்.சான்றிதழுக்கு அமைவாகவும் இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கல்வித்திணைக்கள வெளியீட்டு பிரிவு ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.திலங்கசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

Related posts

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்

Mohamed Dilsad

வரட்சியுடனான காலநிலை – பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிப்பு

Mohamed Dilsad

New Australian Defence Adviser calls on Commander

Mohamed Dilsad

Leave a Comment