(UDHAYAM, COLOMBO) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி , கொழும்பு , களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிலபகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும ்ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக , குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.