(UDHAYAM, COLOMBO) – உலக சனத்தொகையில் 5 சதவீதமானோர் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதாக ஐ.நா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று கோடி மக்கள் சிகிச்சை தேவைப்படும் அளவு வரையில் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தை ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான அலுவலகம் வரைந்துள்ளது. இதன் பிரகாரம், உலகெங்கிலும் நிகழும் போதைப்பொருள் தொடர்பான மரணங்களில் அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.