Trending News

நீதமே இல்லா நீதியமைச்சரின் ஆதிக்கத்தில் சிக்கித்தவிக்கும் இலங்கை நீதியமைச்சு !!!!

 

உடனடியாக  மனசாட்சியுள்ள ஒருவரின் கையில் ஒப்படையுங்கள் !!!

மூலம் colombotelegraph  அஷான் வீரசின்ஹ

தமிழில் – ஏ எம் எம் முஸம்மில் பதுளை

நீதியமைச்சு பதவியும் பௌத்த சாசன (அல்லது வேறு எந்த மத சார்பான அமைச்சும்) அமைச்சு பதவியும் ஒரே நபரின் கையில் (ஒரே தூணில் கட்டியதால்) ஒப்படைக்கப் பட்டதன் விபரீதத்தை விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரால் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் அச்சுறுத்தப் பட்ட சம்பவத்தின் மூலம் அறிய முடிகின்றது. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டுவரும் தாக்குதல்கள் சமந்தமாக  அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி லக்ஷான் டயஸ் அவர்களை பகிரங்கமாக அச்சுறுத்திய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் 24 மணி நேரத்திற்குள் லக்ஷான் டயஸ் கூறிய கருத்துக்கு எதிராக பொதுமக்களிடத்தில் மன்னிப்பு கோராவிட்டால் தமது சட்டத்தரணி தொழிலிலிருந்து விலக்கி வீட்டுக்கு அனுப்புவதாக பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்தார். நீதியமைச்சர்  இவ்வச்சுறுத்தல் மூலம் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை மூடிமறைக்கப் பார்க்கின்றார்.

மேற்படி தாக்குதல்கள் சம்பந்தமாக தாம் ரோமன் கத்தோலிக்க மதத் தலைவர் கார்டினலிடம் விசாரித்ததாகவும் அவ்வாறான தாக்குதல்கள் சமபந்தமாக தாம் ஏதும் அறிந்திருக்க வில்லை என்றும் கார்டினல் தமக்கு அறிவித்ததாகவும், ஆகவே சட்டத்தரணி லக்ஷான் டையசின் கூற்று பொய்யானது என்றும்  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/1-10.jpg”]

எது எவ்வாறாயினும் சட்டத்தரணி லக்ஷான் டயஸின் கூற்று பொய்யானது என்று ஒருதலைபட்சமாக தீர்ப்பு சொல்வதற்கு நீதியமைச்சருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றே நாங்கள் திடமாக நம்புகின்றோம். குறிப்பிட்ட தாக்குதல்கள்  உண்மையானதா அல்லது பொய்யானதா என்று திடமாக தீர்பளித்து அறிக்கை விடுவதாயின் அவ்வறிக்கையானது முறையான சட்ட நடவடிக்கைகளை பின்பற்றிய அடிப்படை பின்புலங்களை கொண்டதாகவே இருக்கவேண்டும். நாம் அறிந்த வகையில் அமைச்சர் விஜேதாச ஏற்கனவே  கத்தோலிக்கர்களின் எதிர் கருத்துடையவர்களை நோக்கியே பக்கசார்பாக  இவ்வறிக்கையை விடுத்துள்ளார்.

“ விஜேதாச ராஜபக்ஷ ” என்பவர் மகிந்தயின் கபினட் உருப்பினரன்றி “ நல்லாட்சி ” எனும் சொல்லுக்கு  விளையாட்தடுக்காகவேனும் பொருந்துபவறல்ல என்பதை பலதடவைகள் அவரின் நடத்தையால் நிரூபித்துக் காட்டியவராவார். சிங்கள பௌத்த வாதத்தை போர் முழக்கமாகக் கையில் தூக்கிப் பிடித்து நாட்டில் இனவாதத்தை பரப்பிதிரியும் தீவிரவாத அமைப்புகளுடனும் அதன் தலைவர்களுடனும் இவர் மேற்கொண்டுள்ள நட்புறவுகள் பற்றி இன்று நாடே அறிந்துள்ளது.  

விஜேதாச ராஜபக்ஷ இன்று பிரதிநிதித்துவப் படுத்துவது கௌதம புத்தரின் தூய பௌத்த தர்மத்தையா ? அல்லது ஞான சார போன்ற ரவுடிகளின் அடாவடித்தனகளையா ?  என்று பகிரங்கமாக கேள்விகளை கேட்க வேண்டிய நிலை, கடந்த குறுகிய காலத்தில் நடந்த சில சம்பவங்களின் போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் நியாயப் படுத்துகின்றது.

லக்ஷான் டயஸின் கூற்று பிழையாயின் முறையானதொரு விசாரணையின் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதட்கு நாம் எந்த வகையிலும் எதிரானவர்களல்ல. ஆனால் இவ்விடயத்தில் இந்தளவு வேகத்தில் அச்சுறுத்தல் அறிக்கைகளை விடுவதற்கு விஜேதாச அமைச்சரின் கடுப்பிற்கும் அவசரத்திட்குமான காரணமென்ன. ? நல்லாட்சியில் அமைச்சு பதவியேற்றிருந்தாலும், விஜேதாச அமைச்சரின் நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இவர் பிரதிநிதித்துவப் படுத்துவது “ தனிச் சிங்களம் மட்டும் ” எனும் பிரிவையே என்பதை எவரும் இலகுவில் புரிந்து கொள்வார்கள். இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால் நல்லாட்சி அரசாங்கம் மைத்ரிபாலவுடையதாக இருந்தாலும் விஜெதாசவின் சிந்தனை போக்கு மஹிந்தவினுடையதாகும். இதுபோன்ற குறுகிய எண்ணம் கொண்ட பயங்கர சிந்தனையுடைய ஒருவருக்கு நீதியமைச்சையும், புத்த சாசன அமைச்சையும் வழங்கி வைத்துள்ளதன் பயங்கரதன்மையை நாம் இப்போது உணர்ந்துகொள்ள வேண்டும் .

பல்லின சமூக அமைப்பை கொண்டதொரு நாட்டின் அரசாங்கத்தின் பிரதான கடப்பாடு மக்களாட்சியே அன்றி குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு மாத்திரம் கூடுதல் வரப்பிரசாதங்கள் வழங்குவதும் அதற்காக முன் நிற்பதுமல்ல. இன நல்லுறவை பாதிக்கும் வகையிலான சட்ட மூலங்கள் இந் நாட்டு அரசியல் யாப்பில் உள்ளடங்கப் பட்டு சிறும்பான்மை சமூகங்களுக்கு அநீதமிழைக்கப் பட்டுள்ளதை நாம் அறிந்து வைத்துளோம். இந் நாட்டு சிரும்பான்மையனருக்கு இல்லாத அதிகாரங்கள் உரிமைகள் சிங்கள-பௌத்த பெரும்பான்மையினருக்கு சட்ட யாப்பின் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/2-11.jpg”]

பல்லின சமூக அமைப்பை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதொரு அரசாயின் ஒவ்வொரு மதத்திற்கும் அல்லது சமயத்திற்கும் தனித்தனியான அமைச்சுகளை அமைப்பதைத் தவிர்த்து பொதுவானதொரு அமைச்சின் மூலம் ஒவ்வொரு சமயத்தினதும் தனித்துவத்தை பேணுவதுடன் சமய நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். அப்போது தான் அனைத்து மதத்தினருக்கும் தமது சமய உரிமைகளை அனுபவிக்கக் கூடிய சூழல் உருவாகும். அதேவேளை ஒரு சமயத்தை யுடையவரை குறித்த அமைச்சுப் பதவியில் அமர்த்துவதால் தாம் சார்ந்த மதத்திற்கு பக்கச் சார்பாக நடந்து கொள்வதையும் தவிர்க்கக் கூடிய வாய்ப்பும் இதன் மூலம் ஏற்படலாம். ஆனால் இலங்கையின் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும் இவ்வாறான நடைமுறைகளை செயட்படுத்துவதால் இவை பெரும்பான்மை சிங்கள பௌத்த சமூகத்தையும் புத்த தர்மத்தையும் அடக்குவதற்காக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளாகவே பெரும்பான்மை சமூகம் எண்ண முற்படுவதும் வியப்பிற்குரிய விடயமல்ல. ஆனால் அவரவர்களின் உண்மையான சமய சுதந்திரத்தை உறுதி செய்வதன் மூலம் அரசியல் கொலைகளுக்கு அப்பால் தற்போதைய நிலைமையை விட தமது சமயங்களை பின்பற்றவும் அனுபவிக்கவும் சமயங்களை பாதுகாக்கவும் எதுவானதொரு சூழல் உருவாகும் என்பதையும் இவர்கள் விளங்க வேண்டும்.

கலகொட அத்தே ஞானசார என்பவர் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை அவமதித்து , சட்டத்தையும் நீதிமன்றத்தையும் துச்சமாக மதித்து செயல்பட்ட மிலேச்சத்தனமானதொரு வரலாற்றைக் கொண்டவர். மதிப்பிற்குரிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப் படும் வழக்குகளின் இடைநடுவே பாதாள உலக சண்டியர்களைப்போல் பிரசன்னமாகி நாட்டின் யுக்தியை நேர்மையை நீதியை  சட்டத்தை நிலைநாட்டும் மொத்த பொறிமுறையையும் கேலிக்கூத்தாக்கியவராவார். கடந்த காலங்களில் மட்டக்களப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு சட்டத்திற்கு முரணாக  அவர்களை பல்வேறு வகையான துன்பங்களுக்கு ஆளாக்கிய  மட்டகளப்பு சுமனேயும் இவருக்கு சளைத்தவரல்ல. போலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் தமது கடமையை செய்ய முற்பட்ட அரச ஊழியருக்கு எதிராக ஊடகங்களுக்கு முன்னிலையில் பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுப்பதற்கு அவரால் முடியுமாயிருந்தது.

ஏற்கனவே இவ்வாறு செயற்பட்ட துஷ்ட ஆட்சியாளர்களை விரட்டிவிட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில் இந் நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட நாம் அனைவரும் இன மத பேதங்களுக்கு அப்பால் ஓரணியில் திரண்டு,   கொண்டுவரப்பட்ட நல்லாட்சியின் நிழலின்  கீழ் இவ்விரு கயவர்களுடன்  ஒன்றாக நின்று புகைப் படம் எடுக்கமுடியுமான வெட்கக் கேடான நிலைமை நீதியமைச்சருக்கு ஏற்பட்டுள்ளதானது கவலைக்குரிய விடயமாகும்.

இந்த வகையில் நோக்கும் போது நீதியமைச்சரின் செயற்பாடுகளும் இந் நாட்டு நீதிமன்றத்தை பாரதூரமாக அவமதித்துள்ளது என்றே கூறவேண்டும். ஒரு நாட்டின் நீதியமைச்சானது மிகப் பொறுப்புவாய்ந்ததொரு அமைச்சாகும். ஒரு நாட்டின்  நீதித் துறை பொறிமுறையை ஸ்தாபிப்பதன் அடிப்படை நோக்கம் அந் நாட்டின் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்த அவனுக்கான நீதியை நியாயத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உறுதி செய்வதாகும். ஆனாலும் பல்லின சமூக அமைப்பைக் கொண்டதொரு நாட்டில் நீதியமைச்சரான ஒருவர் பார்த்த பார்வையிலேயே அவர் ஒரு பக்க சார்பாக செயல்படுகின்றார் என்ற உணர்வு அந் நாட்டின் குடிகளுக்கு ஏற்படுமாயின் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம். நீதியமைச்சுப் பதவி இருந்தாலும் இல்லாவிடினும் விஜேதாச ராஜபக்ஷ எதிர்கால தமது நடவடிக்கைகளிலும் பௌத்த சிங்கள இனவாத செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து களத்தில் இயங்குவார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே இந் நாட்டு நீதிமன்றம் மேலும் மேலும் அவமதிப்பிற்குள்ளாவதை தடுக்க வேண்டும் என்றால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இவ்வமைச்சை இவரிடமிருந்து கையகப் படுத்தி மனசாட்சியுள்ள ஒருவரிடம் கையளிப்பதாகும். .

 

Related posts

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

Mohamed Dilsad

Ban on face coverings not in effect – Police

Mohamed Dilsad

කාලගුණයෙන් රතු නිවේදන: ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස රැසකට අනතුරු ඇඟවීම්

Editor O

Leave a Comment