Trending News

ஜெயம் ரவி, சிம்பு திரைப்படங்களின் வசூல் விவரம்

(UDHAYAM, COLOMBO) – இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘வனமகன்’ திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திரைப்படம், சென்னையில் 17 திரையரங்குகளில் 200 காட்சிகள் திரையிடப்பட்டு இந்திய ரூ.67,82,110 வசூல் செய்துள்ளது. திரையரஙகுகளில் 90% பார்வையாளர்கள் இருந்துள்ளனர்.

இருப்பினும், இந்தத் திரைப்படத்தின் வெற்றியை இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே உறுதி செய்ய முடியும்.

இதேவேளை, சிம்பு, தமன்னா, ஸ்ரேயா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் திருப்திகரமாக இருந்தபோதிலும் படிப்படியாக வசூல் குறைந்ததாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதியில் சென்னையில் 22 திரையரங்குகளில் 278 காட்சிகள் திரையிடப்பட்டு இந்திய ரூ.1,13,83,190 வசூலித்துள்ளதுடன் திரையரஙகுகளில் 90% பார்வையாளர்கள் இருந்துள்ளனர்.

Related posts

Government revise fuel price on formula [UPDATE]

Mohamed Dilsad

Polar vortex claims eight lives as US cold snap continues

Mohamed Dilsad

லொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்

Mohamed Dilsad

Leave a Comment