Trending News

போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தம் அரசியல் பிரச்சினை மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக போதைப் பொருள் தொடர்பான பிரச்சினையை  சமூகமும் ஊடகமும் மறந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டுஇ கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம’பெற்ற நினழ்வில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினர்.

போதைப்பொருள் பாவனை மற்றும் எடுத்துச் செல்வதைத் தடுப்பது தொடர்பான சட்டத்தை வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் சட்டம் மறுசிரமைக்கப்பட வேண்டும். இலங்கை இன்று சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் மத்திய நிலையமாக காணப்படுகிறது. நாட்டின் போதைப்பொருள் பாவனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவும் மறுசீரமைக்கப்படுமென்று பிரதமர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பான பிரச்சினையை நாடு எதிர்கொண்டிருக்கும் பாரிய சவாலாகும்.

எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் நாட்டில் போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தலைத் தடுப்பதே இதன் முக்கிய இலக்காகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மேலும் தெரிவித்தார்.

 

Related posts

லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

Mohamed Dilsad

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

எதிர்வரும் புதன்கிழமை வெசாக் வாரம் ஆரம்பமாகிறது…

Mohamed Dilsad

Leave a Comment