(UDHAYAM, COLOMBO) – உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதமும், இந்த ஆண்டுடன் ஆட்சிக் காலம் நிறைவடையும் மாகாண சபைகளின் தேர்தலை டிசம்பர் மாதமும் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் ஆட்சிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, புதிதாக 92 அரசியல் கட்சிகள் பதிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சிகளை பதிவு செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் ஜுலை மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக அறிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 64 அரசியல் கட்சிகள் பதிவுப் பெற்றுள்ளன.