Trending News

ஒக்டோபர் 31ல் வாக்காளர் பட்டியல் மறுசீரமைக்கும் பணிகள் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – வாக்காளர் பட்டியலை மறுசீரமைக்கும் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி அளவில் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் , வாக்களிப்பதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் பதியப்பட்டிருப்பது கட்டாயமாகும். எனவே இதுவரை குறித்த விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் தமது பிரதேசத்தின் கிராம சேவை அலுவலரிடம் அதனை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்களிப்பது சகல பிரஜைகளதும் பொறுப்பாகும் என்று தெரிவித்த அவர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்காக பெயர்கள் அடங்கிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றும் இதன்போது தெளிவுபடுத்தினார்.

Related posts

இந்தியாவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று…

Mohamed Dilsad

Dalai Lama launches free app

Mohamed Dilsad

Price Change in Gas Soon?

Mohamed Dilsad

Leave a Comment