(UDHAYAM, COLOMBO) – பிரபல ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின், மக்பத் எனும் நாவலில், மக்பத் தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதுவார்.
லண்டனில் தோமஸ் டாலிஸ் எனும் உயர்நிலை பாடசாலையில் அந்த பாடத்தை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை, மக்மத் எழுதுவது போன்று, தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வர மாணவர்களிடம் கூறியுள்ளார்.
ஆசிரியை வீட்டுப் பாடம் கொடுத்தவுடன், மாணவர்கள் பெற்றோரிடம் சென்று தற்கொலை கடிதம் எப்படி எழுதுவது? யாருக்கு எழுதுவது என கேட்டுள்ளனர்.
இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது போன்ற ஆசிரியர்களின் முட்டாள்தனமான செயல்களால் மாணவர்கள் மனரீதியாக பாதிப்படைவர் எனக் கூறி பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், “என் மகள் என்னிடம் வந்து தற்கொலை கடிதம் எப்படி எழுதுவது? எனக்கு பாடசாலையில்; 3 நண்பர்கள் இருக்கிறார்கள்.
நான் தற்கொலை செய்து கொண்டால் அவர்களை இழந்துவிடுவேன் அல்லவா? என என்னிடம் கேட்டாள். இது அதிர்ச்சியாக இருந்தது. குழந்தைகள் மனதில் இது போன்ற எண்ணங்களை விதைக்கும் ஆசிரியர்களின் செயல்களை கண்டிக்க வேண்டும்” என கூறினார்.
இதையடுத்து பெற்றோர்களை சந்தித்த பாடசாலை தலைமை ஆசிரியரான கரோய்ல் ராபர்ட்ஸ் டெய்லி, நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டார்.
இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாது என உறுதி அளித்தார்.