Trending News

அசேல குணவர்தனவின் அபார பிடியெடுப்பு

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாபே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

காலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய சிம்பாபே அணி 33.4 ஓவர்கள் நிறைவில் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 30.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

இந்த போட்டியில் சிம்பாப்வே துடுப்பாடும் போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மஸகட்ஸா 41 ஓட்டங்கள் எடுத்தப் போது ஆட்டமிழந்த நிலையில், அவரின் ஆட்டமிழப்பு பலரின் அவதானத்திற்கு சென்றுள்ளது

15 ஓவரில் அசேல குணவர்தன பந்து வீசிய போது அதனை தடுத்தாடிய மஸகட்ஸா ஆட்டமிழந்தார்.

மஸகட்ஸா தடுத்தாடிய போது வந்த பந்தை மிக அபாரமாக அசேல குணவர்தன பிடியெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Pujith says President did not want him at NSC meetings

Mohamed Dilsad

මෛත්‍රීගේ සහය විජයදාස ට

Editor O

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

Mohamed Dilsad

Leave a Comment