Trending News

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை

(UDHAYAM, COLOMBO) – உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தல்

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பொதுமக்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட கொள்கைப்பிரகடனத்தின் மூலம் சுட்டிக்காட்டியவகையில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது.

இதற்கமைவாக மதிப்பீட்டுக்குழுவின் மூலம் அடிப்படை திருத்தசட்டமூலம் அனைத்து தரப்பினரதும் கருத்துக்கு அமைவாக ஏதேனும் திருத்தங்களை உள்ளடக்கி 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சட்ட வரைஞர் திணைக்களத்தினால் 2017 ஜனவரி 10ம் திகதி மீண்டும் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலம் வெளியிடப்பட்ட போது அதுதொடர்பில் நிதிஅமைச்சு மற்றும் நீதி அமைச்சுக்களினால் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் மதிப்பீடு 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதேபோன்று பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் திருத்த சட்டமூலம் மற்றும் அதன் மதிப்பீடு 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி அமைச்சர்களான சரத் அமுனுகம, அநுரபிரியதர்சன யாப்பா, ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டமை மதிப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.

இதன் மதிப்பீடுகளை உள்ளடக்கிய விடயங்களுடனான புதிய திருத்த சட்டமூலம் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி அளவில் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இந்த திருத்த சட்டமூலம் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரான சரித்த ரத்வத்த மற்றும் கணக்காளர் நாயகம் ஆகியோருக்கு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டமை அவர்களது மதிப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்காகவே ஆகும்.

இந்த திருத்த சட்டமூலம் தொடர்பாக சட்டமா அதிபரின் மதிப்பீடு 2017ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த மதிப்பீடு சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு 2017ம் ஆண்டு ஜுன் மாதம் 1ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக கணக்காய்வாளரின் மதிப்பீடு சட்ட வரைஞர் திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இறுதி சட்டமூல தயாரிப்பு பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனையும் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான முக்கிய சட்டமூலத்தை வகுக்கும் போது அனைத்துத் தரப்புக்களினதும் கருத்துக்களையும் யோசனைகளையும் கருத்திற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனால், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கும் அரச சேவையில் ஒழுக்க விதிகளை மீண்டும் முன்னிலைப்படுத்துவதற்கு முக்கியமாக இந்த சட்ட மூலத்தை மிகவும் கவனத்துடனும் சிறப்பாக வகுப்பதற்கும் அரசாங்கம் தனது ஆகக்கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.

கலாநிதி ரங்க கலன்சூரிய

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

Related posts

Postal strike continues as talks between Government and Unions fail

Mohamed Dilsad

வானிலை முன்னறிவிப்பு

Mohamed Dilsad

பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலாமனார்

Mohamed Dilsad

Leave a Comment