Trending News

மியன்மார் தொடர்பில் அமெரிக்காவின் வலுயுறுத்தல்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையைக் கண்டறியும் குழுவிற்கு மியன்மார் அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் நிக்கி ஹலே இதனைத் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவுக்கான வீசா அனுமதியை வழங்கப்போவதில்லை என்று மியன்மார் அரசாங்க அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.

அத்துடன் அரசாங்கம் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதாகவும், ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் அவசியம் இல்லை என்றும் மியன்மாரின் அரசியல் தலைவரும், நொபேல் பரிசை வென்றவருமான ஆங் சாங் சூகி அறிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்குழுவில் சிறிலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ராதிகா குமாரசுவாமியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

15-Hour water cut in Rajagiriya and surrounding areas – NWSDB

Mohamed Dilsad

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

Mohamed Dilsad

அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை

Mohamed Dilsad

Leave a Comment