Trending News

அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அரச தனியார் ஊடகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளன.

நிதி மற்றும் ஊடக அமைச்சு, அரச தகவல் திணைக்களம், சகல ஊடக நிறுவனங்கள், கையடக்க தொலைபேசி நிறுவனங்கள். சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளன.

இதன் முதலாவது செயல்திட்டம் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும். இந்த நேரத்தில் சகல அரச தனியார் ஊடகங்களும் டெங்கு நோய் தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவுள்ளது.

இன்றிலிருந்து ஆரம்பமாகியுள்ள இந்த டெங்கு உயிர்கொல்லியை அழிக்கும் நோக்கோடு தேசிய வேலைத்திட்டம் டெங்கினை கட்டுப்படுத்தும் தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மக்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் ஐரிஎன் ஊடாக ஒளிபரப்பப்படும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (15)  காலை 9 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை நடைபெறவுள்ளது.இதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைப்பதற்காக அவர்களை அறிவுறுத்தும் நிகழ்ச்சி ஒன்றை சகல ஊடகங்களும் இணைந்து இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளன.

இது தொடர்பாக ஊடக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போது வெளியிடப்பட்டன. இதில் பிரதி அமைச்சர் லசந்த அலகியவண்ண, பிரதமர் காரியாலயத்தின் பிரதி அதிகாரி ரோசி சேனாநாயக்க, அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய உள்ளிட்ட ஊடக பிரதாணிகள் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

Warning of palm oil threat to primates

Mohamed Dilsad

Police curfew in Kandy Administrative District to be lifted

Mohamed Dilsad

India offers to commence flight connectivity with Batticaloa

Mohamed Dilsad

Leave a Comment