Trending News

விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை!!

(UDHAYAM, COLOMBO) – விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிலிச்சை வீழ்த்தி பெடரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் மோதினர்.

இது பெடரர் பங்குபெறும் 11-வது விம்பிள்டன் இறுதி போட்டியாகும்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து சிலிச் மீள்வதற்குள் அதிரடியாக விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இது பெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றி ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Related posts

Kumar Gunaratnam granted Sri Lankan citizenship

Mohamed Dilsad

Zayn Malik changes hair colour to green

Mohamed Dilsad

Depression moving away from Colombo

Mohamed Dilsad

Leave a Comment