Trending News

அரச வைத்தியசாலையில் அரச மரம் சரிந்தினால் பாதிப்பு

(UTV|KANDY)-மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய அரச மரம் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்துள்ளது.(23.11.2017)  இதனால் வைத்தியசாலையின் மருந்தகப்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன். விடுதிகள்ää வாட்டுகள் உட்பட ஏனைய பிரிவுகளுக்கு  செல்லும் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளது. இந்த மரத்தின் அடியில் புத்த பகவானின் உருவ சிலை ஒன்றும் காணப்பட்ட போதும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சரிந்து வீழ்ந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்க் கொண்டுள்ளது. இதனால் விடுதிகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் தாதியர்கள் பாதிபடைந்துள்ளதுடன் வாட்டுகளுக்கும் ஏனைய பிரிவுகளுக்கு  செல்லும் நோயாளர்களும் பாதிப்படைந்து உள்ளனர். இந்த சரிந்து வீழ்வதற்கு மரத்தின் அடிப்பகுதி உக்கியமை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

பா.திருஞானம்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

විජයදාස රාජපක්ෂ පසුපෙළට යයි.

Editor O

බ්‍රිතාන්‍යයේ පාර්ලිමේන්තු මැතිවරණය අද 04

Editor O

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment