Trending News

‘’த டிசைனர் வெடிங் ஷோ’’ ஷங்கிரி லா கொழும்பு ஹோட்டலில் 2017 நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெறும்

(UTV|COLOMBO)-‘’த டிசைனர் வெடிங் ஷோ 2017’’ இலங்கை திருமண ஏற்பாடுகள் தொழிற்துறையின் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கும் நிகழ்வாகும்.இந்நிகழ்வு ‘பிரைட் அண்ட் க்ரூம்’ சஞ்சிகையினால் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலுடன் இணைந்து 2017 நவம்பர் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.வருடாந்தம் இடம்பெறும் இத்தனித்துவமான நிகழ்வில் தேசத்திலுள்ள முன்னணி திருமண ஏற்பாட்டு நிபுணர்களின் நேர்த்தியான திருமண வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்நிகழ்வின் போது முன்னணி திருமண வடிவமைப்புகள் காட்சிபடுத்தபடும். இந்நிகழ்வின் போது முன்னணி திருமண வடிவமைப்பாளர்கள்,சிகை மற்றும் ஒப்பனை கலைஞர்கள் ஒன்றிணைவதுடன் இலங்கை திருமண ஏற்பாடு தொழிற்துறையின் நடைமுறை போக்குகளை வெளிப்படுத்துவார்கள்.

‘பிரைட் அண்ட் க்ரூம்’ சஞ்சிகை கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலுடன் இணைந்து காட்சிபடுத்தும் இந்நிகழ்வில் உலக பிரசித்துபெற்ற டி லேன்ரோல்லே சகோதரர்கள் பங்கேற்கவுள்ளதுடன்,கொழும்பு நகரில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள ஆடம்பர ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெறும் இவ்வாறான முதல் நிகழ்வும் இதுவே ஆகும். 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் வெற்றிகராமான ஏழு திருமண வடிவமைப்புகள் கண்காட்சிகளை நிறைவு செய்துள்ளதுடன், இவ்வாண்டின் கண்காட்சியில் டி லேன்ரோல்லே சகோதரர்கள் என பெரிதும் அறியப்பட்டுள்ள ரோஹான் மற்றும் இஷான் கூட்டிணைந்துள்ளனர்.இம்முறை இலங்கையின் முன்னணி திருமண வடிமைப்பளர்கள்,சிகை மற்றும் ஒப்பனை கலைஞர்களின் கைவண்ணத்தினை காணும் அதேவேளை இச்சகோதரர்களின் இசையை நேரடியாக கண்டும் கேட்டும் மகிழலாம்.

‘’த டிசைனர் வெடிங் ஷோ 2017’’ ஷங்கிரி லா பால்ரூமில் பி.ப 6.30 தொடக்கம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கண்காட்சியில் பங்கேற்கும் வடிவமைப்பு கலைஞசர்களின் விபரம்:சரித் விஜேசேகர,சிரில் குணரத்ன,தனஞ்ஜய பண்டார,ஹமீடியா மைக்கல் விஜேசூரிய,நயனா கருணாரத்ன,பிரேமசிறி ஹேவாவசம்,பீ.வி.எஸ் ஜயரத்ன,ரமணி ப்ர்ணான்டோ அண்ட் அஸ்லம் ஹுசைன்,ரம்சி ரஹ்மான்,ரொமேஷ் அத்தபத்து,சரிதா,சுமுது குமாரசிரி,சுமுது வசந்த,தெரின் கப்பலகே,துசித எதுகல,யோலாந் அளுவிகார.இந்நிகழ்வில் லூ சிங் வோங் உருவாக்கிய தனிப்பட்ட படைப்புகளை பாராட்டி அவருக்கு விசேட வாழ்நாள் சாதனையாளர் விருதொன்று வழங்கப்படும்.

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/3.png”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/2.png”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/1.png”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/4.png”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/5.png”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/11/6.png”]

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

Mohamed Dilsad

Bambalapitiya Hit-and-Run: Borella Police Traffic OIC succumbs to injuries

Mohamed Dilsad

One arrested with over 3000 litres of illicit liquor

Mohamed Dilsad

Leave a Comment