(UTV|COLOMBO)-இலங்கையில் தேசிய மீள்சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 12 நோய்களுக்கு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அபாயகர நோய் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
சிறந்த பலனை அளிக்கக்கூடிய தடுப்பூசி இவை என்பதால் சிறுவர் பராயத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான நோய்களைக் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அபாயகர நோய் விஞ்ஞான பிரிவு, டெங்கு நோய்க்காக புதிய தடுப்பூசியொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் புத்திஜீவிகள் சபை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது போலியோ போன்ற நோய்கள் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. பிறப்பிலேயே உள்ள ஆஸ்மா நோயிலிருந்து விடுபடுவதற்கும் அம்மை மற்றும் ருபெல்லா ஆகிய நோய்களிலான பாதிப்பை குறைக்க முடிந்துள்ளது.
மேலும் மஞ்சள் காமாலை, இன்புளுவென்சா ‘பி’, ஜப்பானிஸ் என்சேபலஸ்ரிஸ் போன்ற நோய்களின் பாதிப்பையும் குறைக்க முடிந்துள்ளது.
சமீபத்தில் 6 வயது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.எச்.பி.தடுப்பூசியின் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்க முடிந்ததாகவும் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்தார்.
இதன்மூலம் நாட்டில் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் மீள் சக்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]